உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது நியூசிலாந்து: இலங்கை அணி ஆறுதல் வெற்றி

கோப்பை வென்றது நியூசிலாந்து: இலங்கை அணி ஆறுதல் வெற்றி

நெல்சன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய இலங்கை அணி 7 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற நியூசிலாந்து, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நெல்சனில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (14), குசால் மெண்டிஸ் (22) சுமாரான துவக்கம் கொடுத்தனர். அபாரமாக ஆடிய குசால் பெரேரா, 46 பந்தில் 101 ரன் (4 சிக்சர், 13 பவுண்டரி) விளாசினார். கேப்டன் சரித் அசலங்கா (46) கைகொடுக்க, இலங்கை அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் (37), ரச்சின் ரவிந்திரா (69) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மார்க் சாப்மேன் (9), பிலிப்ஸ் (6) ஏமாற்றினர். டேரில் மிட்சல் (35) ஓரளவு கைகொடுத்தார். மிட்செல் ஹே (8), பிரேஸ்வெல் (1) சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டன. பினுரா பெர்ணான்டோ பந்துவீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்சர் உட்பட 14 ரன் மட்டும் கிடைத்தது.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சான்ட்னர் (14), ஜகாரி பவுல்க்ஸ் (21) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் சரித் அசலங்கா 3, வணிந்து ஹசரங்கா 2 விக்கெட் சாய்த்தனர்.ஆட்ட நாயகன் விருதை இலங்கையின் குசால் பெரேரா வென்றார். தொடர் நாயகன் விருதை நியூசிலாந்தின் ஜேக்கப் டபி (8 விக்கெட்) கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி