உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / டில்லியில் பாரா விளையாட்டு

டில்லியில் பாரா விளையாட்டு

புதுடில்லி: 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு டில்லியில் இன்று துவங்குகிறது.டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு 2வது சீசன் இன்று முதல் மார்ச் 27 வரை நடக்கிறது. இதில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தடகளம், வில்வித்தை, பவர்லிப்டிங், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் என 6 வகையான விளையாட்டு நடத்தப்படுகிறது. இதற்கான போட்டிகள் டில்லியில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்கின்றன. இன்று, டில்லியில் உள்ள இந்திரா உள்ளரங்கு மைதானத்தில் துவக்க விழா நடக்கிறது.கடந்த 2023 டிசம்பரில், 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு முதல் சீசன் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்கள் சிலர், கடந்த ஆண்டு பாரிசில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் விளையாடினர். தவிர பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 9 தங்கம் உட்பட 29 பதக்கம் கிடைத்தது.இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் ஜஜாரியா கூறுகையில், ''இந்திய பாரா விளையாட்டு நட்சத்திரங்களுக்கு, சர்வதேச தரத்தில் பயிற்சி மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் சீசனில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்கள் சிலர், பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றனர். இதேபோல 2வது சீசனில் பங்கேற்கும் நட்சத்திரங்கள், சர்வதேச அரங்கில் நிறைய பதக்கம் வெல்வர் என நம்புகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ