உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சிக்சர் மன்னன் போலார்டு: கரீபியன் பிரிமியர் லீக் அரங்கில்

சிக்சர் மன்னன் போலார்டு: கரீபியன் பிரிமியர் லீக் அரங்கில்

செயின்ட் லுாசியா: கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசினார் போலார்டு.வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) 13வது சீசன் நடக்கிறது. செயின்ட் லுாசியாவில் நடந்த போட்டியில் டிரின்பாகோ அணி (183/10), 18 ரன் வித்தியாசத்தில் செயின்ட் லுாசியா அணியை (165/6) வீழ்த்தியது. இப்போட்டியில் 29 பந்தில், 6 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 65 ரன் விளாசிய டிரின்பாகோ அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, ஆட்ட நாயகன் விருது வென்றார். சி.பி.எல்., அரங்கில் 200 சிக்சர் விளாசிய 2வது வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் போலார்டு. இதுவரை 128 போட்டியில், 203 சிக்சர் பறக்கவிட்டுள்ளார். ஏற்கனவே செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் எவின் லீவிஸ் 200 சிக்சர் அடித்திருந்தார்.ஒட்டுமொத்த 'டி-20' லீக் வரலாற்றில், இரு அணிகள் சார்பில் தலா 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் போலார்டு. ஏற்கனவே இவர், இந்தியாவில் நடக்கும் பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் (189 போட்டி) பறக்கவிட்டிருந்தார்.ஒட்டுமொத்த 'டி-20' வரலாற்றில், கிறிஸ் கெய்லுக்கு (14,562 ரன், 1056 சிக்சர்) பின் அதிக ரன், அதிக சிக்சர் அடித்த வீரரானார் போலார்டு (13,181 ரன், 941 சிக்சர்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை