உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்க அணி வெற்றி: பெண்கள் உலக கோப்பையில்

தென் ஆப்ரிக்க அணி வெற்றி: பெண்கள் உலக கோப்பையில்

கொழும்பு: உலக கோப்பை லீக் போட்டியில் கேப்டன் லாரா வோல்வார்ட், தஸ்னிம் பிரிட்ஸ் அரைசதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி ஏமாற்றியது.கொழும்புவில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி (11), ஹாசினி (4) ஏமாற்றினர். இலங்கை அணி 12 ஓவரில், 46/2 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.மழை நின்ற பின், 20 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. கவிஷா (14), ஹர்ஷிதா (13) நிலைக்கவில்லை. பின் இணைந்த விஷ்மி, நிலாக் ஷிகா ஜோடி ஆறுதல் தந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது நிலாக் ஷிகா (18) அவுட்டானார். அனுஷ்கா (1) 'ரன்-அவுட்' ஆனார். மலாபா பந்தில் விஷ்மி (34) அவுட்டானார்.இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 105 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் மலாபா 3, மசபடா கிளாஸ் 2 விக்கெட் கைப்பற்றினர். 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் (60*), தஸ்னிம் பிரிட்ஸ் (55*) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 14.5 ஓவரில் 125/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை