உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / விராத் கோலி 300: ஒருநாள் அரங்கில் புதிய மைல்கல்

விராத் கோலி 300: ஒருநாள் அரங்கில் புதிய மைல்கல்

துபாய்: இந்தியாவின் கோலி, தனது 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.துபாயில் நடக்கும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றலாம்.இது, ஒருநாள் அரங்கில் இந்தியாவின் விராத் கோலி களமிறங்கிய 300வது போட்டியானது. இப்போட்டியில் இவர், 11 ரன்னில் (2 பவுண்டரி) அவுட்டானார்.ஒருநாள் அரங்கில் 300வது போட்டியில் விளையாடிய 7வது இந்திய வீரரானார் கோலி. இதுவரை 300 போட்டியில், 51 சதம் உட்பட 14,096 ரன் குவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (463 போட்டி), தோனி (350), டிராவிட் (344), முகமது அசார் (334), கங்குலி (311), யுவராஜ் சிங் (304) இம்மைல்கல்லை எட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ