வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Richa aattathil irukkum varai win panna vaaippu athigam thaan . very nice aattam
சிறப்பான ஆட்டத்தை ரிச்சா வெளிப்படுத்தி வருகிறார்.
வதோதரா: டபிள்யு.பி.எல்., முதல் லீக் போட்டியில் பெங்களூரு அணி, 6 விக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது. குஜராத்தில் பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) தொடர் நேற்று துவங்கியது. மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த முதல் மோதலில் நடப்பு சாம்பியன் பெங்களூரு, குஜராத்தை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பீல்டிங் தேர்வு செய்தார்.கார்டுனர் அரைசதம்குஜராத் அணிக்கு பெத் மூனே, லாரா ஜோடி துவக்கம் தந்தது. லாராவை (6) ரேணுகா போல்டாக்கினார். ஹேமலதா (4) நிலைக்கவில்லை. ஜார்ஜியா வீசிய 10வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த மூனே, அரைசதம் அடித்தார். இவர், 56 ரன்னில் (42 பந்து), பிரேமா பந்தில் வீழ்ந்தார். பிரேமா வீசிய 14வது ஓவரில் அசத்திய கார்டுனர், 'ஹாட்ரிக்' சிக்சர் அடிக்க, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர் 25வது பந்தில் அரைசதம் எட்டினார். மறுபக்கம் டாட்டின் (25), சிம்ரன் (11) அவுட்டான போதும், ரன் வேகம் குறையவில்லை. குஜராத் அணி 20 ஓவரில் 201/5 ரன் குவித்தது. கேப்டன் கார்டுனர் (79), ஹர்லீன் (9) அவுட்டாகாமல் இருந்தனர். ரிச்சா அபாரம்கடின இலக்கைத் துரத்திய பெங்களூரு அணிக்கு ஸ்மிருதி மந்தனா (9), டேனி வயாத் (4) ஜோடி துவக்கத்தில் கைவிட்டது. பின் எல்லிஸ் பெர்ரி, ராகவி (25) இணைந்தனர். 27 வது பந்தில் பெர்ரி (57) அரைசதம் கடந்தார். ரிச்சா கோஷ் 23வது பந்தில் அரைசதம் அடிக்க, பெங்களூரு வெற்றி எளிதானது. பெங்களூரு அணி 18.3 ஓவரில் 202/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரிச்சா (64 ரன், 27 பந்து), கனிகா (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
Richa aattathil irukkum varai win panna vaaippu athigam thaan . very nice aattam
சிறப்பான ஆட்டத்தை ரிச்சா வெளிப்படுத்தி வருகிறார்.