மேலும் செய்திகள்
பாரத் பெட்ரோலியம், ஒடிசா ஹாக்கி தொடரில் முன்னிலை
25-Sep-2024
பியுனஸ் ஏர்ஸ்: 'பிபா' உலக கால்பந்து தகுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, 6-0 என பொலிவியாவை வீழ்த்தியது.'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்கவுள்ளது. இதற்கான தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிச்சுற்று (10 அணிகள்) போட்டிகள் தற்போது நடக்கின்றன. அர்ஜென்டினாவில் நடந்த போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி, பொலிவியாவை சந்தித்தது.போட்டியின் 19 வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து லா மார்டினஸ் (43வது), ஆல்வெரஸ் (45+3வது) தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் அர்ஜென்டினா 3-0 என முந்தியது.இரண்டாவது பாதியில் ஆல்மடா (69வது) ஒரு கோல் அடித்தார். கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட மெஸ்சி, 84, 86 வது நிமிடங்களில் அடுத்தடுத்து அசத்த, 'ஹாட்ரிக்' கோல் அடித்து கலக்கினார். முடிவில் அர்ஜென்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் பிரேசில் அணி 4-0 என பெருவை வீழ்த்தியது. இதுவரை முடிந்த போட்டி முடிவில் அர்ஜென்டினா, 22 புள்ளியுடன் (10 போட்டி, 7 வெற்றி, 1 'டிரா', 2 தோல்வி) முதலிடத்தில் உள்ளது. கொலம்பியா (19), உருகுவே (16), பிரேசில் (16) அணிகள் அடுத்த 3 இடத்தில் உள்ளன.
25-Sep-2024