உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / இந்திய வீரருக்கு ஆப்பரேஷன் * கால்பந்து போட்டியில் காயம்

இந்திய வீரருக்கு ஆப்பரேஷன் * கால்பந்து போட்டியில் காயம்

புதுடில்லி: மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது. உலகத் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றது. தனது இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் ஈரானிடம் தோற்றது. இப்போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக களமிறங்கினார் தற்காப்பு வீரர் சந்தேஷ் ஜின்கன் 32. அப்போது, இவரது கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட, தொடரில் இருந்து வெளியேறி, நாடு திரும்பினார். நேற்று கோவாவில் ஜின்கனுக்கு ஆப்பரேஷன் நடந்தது. இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) வெளியிட்ட அறிக்கையில்,'ஐ.எஸ்.எல்., தொடரில் ஜின்கன் விளையாடும் கோவா அணி, ஏ.ஐ.எப்.எப்., இணைந்து சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இவர், மீண்டும் போட்டிக்கு திரும்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்,' என தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஆசிய கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி, அக். 9, 14ல் சிங்கப்பூரை சந்திக்க உள்ளது. இதில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், ஜின்கன் காயம் பின்னடைவை தந்துள்ளது. கிடைக்குமா 'மூன்று'நேஷன்ஸ் கால்பந்து தொடரில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த ஈரான் பைனலுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி 4 புள்ளியுடன் (3ல் தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வி) 2வது இடம் பெற்றது. இதையடுத்து மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ