உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அபாரம்

கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அபாரம்

புவனேஸ்வர்: ஐ.டபிள்யு.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கோகுலம் கேரளா அணிகள் வெற்றி பெற்றன.இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் 8 வது சீசன் நடக்கிறது. நடப்பு சாம்பியன் ஒடிசா, கோல்கட்டாவின் ஈஸ்ட் பெங்கால் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று ஒடிசாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், நிடா கால்பந்து அகாடமி அணிகள் மோதின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஈஸ்ட் பெங்கால் சார்பில் அஞ்சு தமாங் (30 வது நிமிடம்), சவுமியா (48), ரேஸ்டி நான்ஜிரி (50), சந்தியா (67) தலா ஒரு கோல் அடித்தனர். நிடா அணிக்கு கிப்டி (61) மட்டும் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.மற்றொரு போட்டியில் கோகுலம் கேரளா அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்ரீபூமி கிளப் அணியை சாய்த்தது. கேரளா சார்பில் பஜில்லா (1, 41, 56, 72) நான்கு கோல் அடித்து மிரட்டினார். ஷூபாங்கி (43) ஒரு கோல் அடித்தார். ஸ்ரீபூமி அணிக்கு அகவுசா (38) மட்டும் கோல் அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை