உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / அன்வருக்கு தடை, ரூ. 12.9 கோடி அபராதம் * ஐ.எஸ்.எல்., தொடரில் குழப்பமா

அன்வருக்கு தடை, ரூ. 12.9 கோடி அபராதம் * ஐ.எஸ்.எல்., தொடரில் குழப்பமா

கோல்கட்டா: இந்திய வீரர் அன்வர் அலி போட்டிகளில் பங்கேற்க நான்கு மாதம் தடை விதிக்கப்பட்டது. ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 11 வது சீசன் செப் 13 முதல் 2025, மே 4 வரை நடக்கவுள்ளது. கோல்கட்டாவில் நடக்கவுள்ள முதல் போட்டியில் மோகன் பகான், மும்பை அணிகள் மோத உள்ளன.இதற்கான மோகன் பகான் அணியில் இடம் பெற்றிருந்தார் இந்திய வீரர் அன்வர் அலி 24. ஒப்பந்தம் முடிய இன்னும் நான்கு ஆண்டு மீதம் உள்ள நிலையில், கடந்த மாதம் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு நிரந்தரமாக மாறினார். ஏற்கனவே டில்லி அணியில் இருந்து, அன்வர் அலி 4 ஆண்டு 'லோன்' முறையில் மோகன் பகான் அணிக்கு வந்திருந்தார். இதுகுறித்து விசாரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (ஏ.ஐ.எப்.எப்.,) வீரர்கள் ஸ்டேட்டஸ் குழு, அன்வர் அலி போட்டிகளில் பங்கேற்க 4 மாதம் தடை விதித்தது. தவிர, அன்வர் அலி, ஈஸ்ட் பெங்கால், டில்லி அணிகள் இணைந்து, இழப்பீட்டுத் தொகையாக ரூ. 12.9 கோடியை, மோகன் பகான் அணிக்கு தர வேண்டும் என உத்தரவிட்டது. ஐ.எஸ்.எல்., தொடர் துவங்க சில நாட்களே உள்ள நிலையில் தடை, அபராத அறிவிப்பு அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளன.அப்பீல் செய்யலாமாதற்போது அன்வர் அலி, தனது தடையை எதிர்த்து ஏ.ஐ.எப்.எப்., அப்பீல் குழுவில் அப்பீல் செய்யலாம். ஒருவேளை தடை உறுதி செய்யப்படும் பட்சத்தில் சிக்கல் அதிகரிக்கும்.அடுத்து 4 மாத தடை முடிந்தாலும், மோகன் பகான் அணிக்கு ரூ. 12.9 கோடி தரப்படும் வரையில், இந்தியாவுக்கான போட்டிகளிலும் அன்வர் அலி பங்கேற்க முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை