உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: அசத்துமா பெங்களூரு * கோவாவுடன் மீண்டும் அரையிறுதி

கால்பந்து: அசத்துமா பெங்களூரு * கோவாவுடன் மீண்டும் அரையிறுதி

கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்து இரண்டாவது சுற்று அரையிறுதியில் இன்று பெங்களூரு-கோவா அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. 13 அணிகள் களமிறங்கின. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடம் பெற்ற மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. பெங்களூரு, ஜாம்ஷெட்பூர் அணிகள் 'பிளே ஆப்' போட்டியில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தன. அரையிறுதி எப்படிஐ.எஸ்.எல்., கால்பந்து அரையிறுதி இரண்டு போட்டி கொண்டதாக நடக்கிறது. இரு போட்டி முடிவில் அதிக கோல் அடிப்படையில் முந்தும் அணி, பைனலுக்கு முன்னேறும். இதன் படி அரையிறுதி முதல் போட்டியில் பெங்களூரு அணி 2-0 என கோவாவை வென்றது. இன்று பெங்களூரு, கோவா அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சுனில் செத்ரி தலைமையிலான பெங்களூரு அணி, இப்போட்டியை குறைந்த பட்சம் 'டிரா' செய்தால் போதும், பைனலுக்கு முன்னேறிவிடலாம். கோவாவை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 3 கோல் வித்தியாசத்தில் (3-0) வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்லலாம். இரு அணிகள் மோதிய 15 போட்டியில் பெங்களூரு 7, கோவா 4ல் (4 'டிரா') வென்றன. இருப்பினும் சொந்தமண் நம்பிக்கையில் களமிறங்குவதால் கோவா மீண்டு வர முயற்சிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ