மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
05-Oct-2025
ஓஸ்லோ: சர்வதேச கால்பந்து அரங்கில் அதிவேகமாக 50 கோல் அடித்து சாதனை படைத்தார் நார்வேயின் எர்லிங் ஹாலந்து.நார்வேயில் நடந்த உலக கோப்பை கால்பந்து (2026), ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் நார்வே, இஸ்ரேல் அணிகள் மோதின. இதில் எர்லிங் ஹாலந்து, 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க, நார்வே அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆறாவது வெற்றியை (18 புள்ளி) பதிவு செய்த நார்வேயின், உலக கோப்பை வாய்ப்பு பிரகாசமடைந்தது.இப்போட்டியில் அசத்திய எர்லிங் ஹாலந்து, சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 50வது கோல் அடித்தார். இதுவரை 46 போட்டியில், 51 கோல் அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கால்பந்து அரங்கில் குறைந்த போட்டியில் (46), 50 கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன் இங்கிலாந்தின் ஹாரி கேன், 71 போட்டியில் இம்மைல்கல்லை எட்டியிருந்தார்.இப்பட்டியலில் அடுத்த 5 இடங்களில் பிரேசிலின் நெய்மர் (74 போட்டி), பிரான்சின் எம்பாப்வே (90), போலந்தின் ராபர்ட் லெவான்டவ்ஸ்கி (90), அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (107), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (114) உள்ளனர்.
05-Oct-2025