மேலும் செய்திகள்
தெற்காசிய கால்பந்து: இந்தியா வெற்றி
09-May-2025
யுபியா: தெற்காசிய கால்பந்து (19 வயது) தொடரின் பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் (19 வயதுக்குட்பட்ட) அருணாச்சல பிரதேசத்தில் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் இலங்கை (8-0), நேபாளத்தை (4-0) வீழ்த்தி, முதலிடம் (6 புள்ளி) பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 3-0 என மாலத்தீவை சாய்த்தது. இன்று நடக்கும் பைனலில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதில் சாதிக்கும் பட்சத்தில் இந்தியா, இத்தொடரில் 10 வது கோப்பை கைப்பற்றலாம். இதற்கு இதுவரை 5 கோல் அடித்த மீட்டெய், பிரஷாந்த் (3), ஓமங் (3) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கைகொடுக்க வேண்டும். வங்கதேசத்தை பொறுத்தவரையில் லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு டிரா செய்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 2-1 என நேபாளத்தை வீழ்த்தியது. 3 கோல் அடித்த நஜ்மல் பைசல், தலா ஒரு கோல் அடித்த முர்செத், ஸ்ரீ சோரன் உள்ளிட்டோர் உதவ முயற்சிக்கலாம்.
09-May-2025