மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
17-Sep-2025
கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டன் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 2-0 என, நேபாளத்தை வென்றது.அசாமின் கவுகாத்தியில், கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நேற்று துவங்கியது. மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கு அணி, 'நாக்--அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, 'எச்' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இந்திய அணி, தனது முதல் போட்டியில் நேபாளத்தை சந்தித்தது. இதில் இந்தியா 2-0 (45-18, 45-17) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஒற்றையரில் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, சூர்யான்ஷ் ரவாத், ரவுனக் சவுகான் வெற்றி பெற்றனர்.மற்றொரு 'எச்' பிரிவு லீக் போட்டியில் இலங்கை அணி 2-1 (30-45, 45-34, 45-44) என, ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது.இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
17-Sep-2025