உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவுக்கு 21 பதக்கம்: உலக காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதலில்

இந்தியாவுக்கு 21 பதக்கம்: உலக காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதலில்

ஹனோவர்: உலக காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 7 தங்கம் உட்பட 21 பதக்கம் கிடைத்தன.ஜெர்மனியில், உலக காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 16 நாடுகளை சேர்ந்த, 70 பேர், 16 வகையான பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 13 பேர், 15 வகையான பிரிவுகளில் விளையாடினர்.பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்' பிரிவில் இந்தியாவின் மஹித் சாந்து தங்கம் வென்றார். ஆண்களுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் அபினவ் தேஷ்வால் தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் சேட்டன் ஹன்மத் சப்கல், வெண்கலம் கைப்பற்றினார்.இத்தொடரில் 7 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்றது. இந்தியா சார்பில் அபினவ் தேஷ்வால், அதிகபட்சமாக 5 பதக்கம் (ஒரு தங்கம், 4 வெள்ளி) வென்றார். மஹித் சாந்து, 4 பதக்கம் (3 தங்கம், ஒரு வெள்ளி) கைப்பற்றினார். தனுஷ் ஸ்ரீகாந்த் 2 தங்கம், அனுயா பிரசாத், சவுரியா சைனி தலா ஒரு தங்கம் வென்றனர்.பதக்கப்பட்டியலில் 2, 3வது இடத்தை உக்ரைன் (7 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்), ஜெர்மனி (2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ