உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய ஜோடி உலக சாதனை * உலக கோப்பை வில்வித்தையில்...

இந்திய ஜோடி உலக சாதனை * உலக கோப்பை வில்வித்தையில்...

மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 4) நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு தகுதிச்சுற்றில் 85 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் ரிஷாப் யாதவ் 718 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்தார். பெண்கள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி 715 புள்ளி எடுத்தார்.இதையடுத்து கலப்பு அணிகள் பிரிவில் ரிஷாப், ஜோதி ஜோடி மொத்தம் 1431 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. இது புதிய உலக சாதனை ஆனது. முன்னதாக 2023ல் ஐரோப்பிய விளையாட்டில் டென்மார்க்கின் தன்ஜா, மதியாஸ் ஜோடி 1429 புள்ளி எடுத்து இருந்தது.அடுத்து அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் ஜோதி, பர்னீத் கவுர், பிரதிகா இடம் பெற்ற அணி, அரையிறுதியில் இத்தோனேஷியாவை சந்தித்தது. இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி 230-226 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் சீன தைபே அணியை சந்திக்க உள்ளது.ரிஷாப், பிரதமேஷ், அமன் இடம் பெற்ற இந்திய காம்பவுண்டு ஆண்கள் அணி, காலிறுதியில் 233-234 என பிரான்சிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை