மேலும் செய்திகள்
கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
04-Jun-2025
ஜூனியர் ஹாக்கி: இந்தியா அபாரம்
15-Jun-2025
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடக்கிறது. ஜூனியர் ரிகர்வ் பிரிவு அணிகளுக்கான அரையிறுதியில் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் விஷ்ணு, பராஸ் ஹூடா, ஜுயல் சர்கார் இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை சந்தித்தது. இதில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் 'நம்பர்-3' ஜப்பான அணியை சந்திக்கவுள்ளது.கலப்பு ரிகர்வ் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, விஷ்ணு ஜோடி, 5-3 என்ற கணக்கில் சிங்கப்பூரின் தபிதா, எர்ன் லின் ஜோடியை வென்று, பைனலுக்கு முன்னேறியது. காம்பவுண்டு அணிகளுக்கான அரையிறுதியில் குஷால், கணேஷ், மிஹிர் இடம் பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டி 232-232 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்' போட்டியில் இந்தியா 30-29 என வென்றது. பைனலில் கஜகஸ்தானை சந்திக்க உள்ளது. இதுவரை இந்தியாவின் 5 அணிகள் பைனலுக்கு முன்னேறியுள்ளன.
04-Jun-2025
15-Jun-2025