உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழக பெண்கள் தங்கம் * தேசிய சீனியர் தடகளத்தில் அபாரம்

தமிழக பெண்கள் தங்கம் * தேசிய சீனியர் தடகளத்தில் அபாரம்

சென்னை: தேசிய 'சீனியர்' தடகளத்தில் தமிழக பெண்கள் 'ரிலே' அணி தங்கம் கைப்பற்றியது.சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64 வது சீசன் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ள உலக தடக சாம்பியன்ஷிப்பில் (செப். 13-21) பங்கேற்க தகுதி பெறலாம். நேற்று சென்னையில் பெய்த மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்பட்டன.பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் பவித்ரா, ஏஞ்சல், அபிநயா, தனலட்சுமி இடம் பெற்ற அணி 44.73 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றியது. கர்நாடகா (45.34), கேரளா (46.54) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றன.ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் தேஜாஸ் ஷிர்சே (13.60 வினாடி) தங்கம், தமிழகத்தின் மானவ் (14.03) வெள்ளி வென்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் நந்தினி (13.45) வெள்ளி கைப்பற்றினார்.பெண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயத்தில் தமிழகத்தின் மோகவி முத்துரத்தினா (ஒரு மணி நேரம், 41 நிமிடம், 34.72 வினாடி) மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.இதுவரை தமிழகம் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை