குத்துச்சண்டை: ஹர்திக் தஹியா வெற்றி
அம்மான்: ஆசிய குத்துச்சண்டை தொடரை இந்தியாவின் ஹர்திக் தஹியா, ருத்ராக் ஷ் சிங் வெற்றியுடன் துவக்கினர்.ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 43 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹர்திக் தஹியா, கிர்கிஸ்தானின் குபானிச்பெக் போலுஷோவ் மோதினர். அபாரமாக ஆடிய ஹர்திக் தஹியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.ஆண்களுக்கான 46 கிலோ பிரிவு (15 வயது) முதல் சுற்றில் இந்தியாவின் ருத்ராக் ஷ் சிங், மங்கோலியாவின் இப்ராஹிம் மாரல் மோதினர். இதில் ருத்ராக் ஷ் 5-0 என வெற்றி பெற்றார்.