உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: 9 வயது ஆரித் அபாரம்

செஸ்: 9 வயது ஆரித் அபாரம்

புதுடில்லி: கார்ல்சனுக்கு எதிரான போட்டியில் சவால் கொடுத்து அசத்தினார் 9 வயது இந்திய வீரர் ஆரித்.சர்வதேச செஸ் தொடர் 'ஆன்-லைனில்' நடந்தது. இந்தியாவின் 9 வயது வீரர் ஆரித் கபில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற உலகின் 'நம்பர்-1' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 34, மோதினர். சமீபத்தில் முடிந்த 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் 2வது இடம் பிடித்த ஆரித் கபில், கார்ல்சனுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார் செலுத்தினார்.25வது நகர்த்தலில் கார்ல்சன் தவறு செய்ய, ஆரித் ஆதிக்கம் செலுத்தினார். பின் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்ல்சன், போட்டியை 'டிரா' செய்து, தப்பித்தார்.கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடந்த சர்வதேச தொடரில் அமெரிக்காவின் ராசெட் ஜியாட்டினோவை வீழ்த்திய ஆரித் கபில், கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனை படைத்தார்.இத்தொடரில் இந்தியாவின் பிரனவ் (10 புள்ளி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை அமெரிக்காவின் ஹான்ஸ் நைமன் (9.5 புள்ளி), கார்ல்சன் (9.5) பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishnamurthy Venkatesan
ஜூன் 26, 2025 13:43

இவ் விளையாட்டில் தொடர்ந்து இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டுமெனில், பள்ளிகளில் இந்த விளையாட்டில் மாணவர்களுக்கு தீவிர பயிற்சி தர வேண்டும். அதுமட்டுமன்றி, நீச்சல் பயிற்சியும் தரவேண்டும்.


shyamnats
ஜூன் 26, 2025 08:08

மேன் மேலும் வளர, சாதிக்க வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை