உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இனியனுக்கு இரண்டு தங்கம் * காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில்

இனியனுக்கு இரண்டு தங்கம் * காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில்

கொழும்பு: காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இனியன், இரண்டு தங்கப்பதக்கம் வென்றார்.இலங்கையில் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா உட்பட 13 நாடுகளில் இருந்து 96 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.'ரேபிட்' பிரிவில் இந்தியாவின் இனியன், 7 சுற்றில் 6 வெற்றி, ஒரு 'டிரா' செய்ய, 6.5 புள்ளிகள் பெற்று, தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ஸ்ரீஹரி, மித்ரபா, வெள்ளி, வெண்கலம் வென்றனர்.'பிளிட்ஸ்' பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட இனியன், 6.5 புள்ளி (7 சுற்று) எடுத்து, தங்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்கள் ரோகித், ஸ்ரீஹரி, வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.தவிர, இந்தியாவின் ஈதன் (20 வயது ஓபன்), நிவேதிதா (20 வயது, பெண்கள்), எபெனேசர் ஜோசப் (60), தமிழ் அமுதன் (10), பிரித்திகா (8), நட்சத்திரா (10), பூஜா ஸ்ரீ (12), ஆதிராஜ் (14), ரேயன் (18), சரண்யா தேவி (18) உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை