உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

லண்டன்: லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் கார்ல்சன் தலைமையிலான ஆல்பைன் அணி, மும்பை மாஸ்டர்ஸ் அணியை சந்தித்தது. கார்ல்சன், பிரான்சின் மேக்சிம் வாசியரை (மும்பை) சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய கார்ல்சன், 54 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.மற்றொரு போட்டியில் ஆல்பைன் வீரர் பிரக்ஞானந்தா, சக வீரர், மும்பையின் விதித் குஜ்ராத்தியை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும் மும்பை அணி 14-5 என்ற கணக்கில், இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணி 14-5 என்ற கணக்கில் திரிவேணி அணியை வீழ்த்தியது. இதுவரை நடந்த போட்டி முடிவில் அலாஸ்கன் நைட்ஸ் அணி (15 புள்ளி), திரிவேணி (12 புள்ளி) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை