உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பிரக்ஞானந்தா-குகேஷ் டிரா

பிரக்ஞானந்தா-குகேஷ் டிரா

புக்காரெஸ்ட்: குகேஷ், பிரக்ஞானந்தா மோதிய கிராண்ட் செஸ் தொடரின் முதல் சுற்று 'டிரா' ஆனது.கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் நடக்கும் 6 தொடர் முடிவில், புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம். இதன் இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ காருணா உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் சமபலத்தில் விளையாடினர். 18 வது நகர்த்தில் குகேஷ் முந்தினார். பின் பிரக்ஞானந்தா மீண்டு வந்தார். முடிவில் 35 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.முதல் சுற்று முடிவில் வெஸ்லே (1.0), பிரான்சின் அலிரேசா (1.0), காருணா (0.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (0.5), குகேஷ் (0.5) 7, 8வது இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை