உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: பிரக்ஞானந்தா டிரா

செஸ்: பிரக்ஞானந்தா டிரா

புக்காரெஸ்ட்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனின், இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடந்தது. எட்டு சுற்று முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தார்.இதன் 9வது, கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தன. பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். இதில் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. பிரான்சின் மேக்சிம் வாசியர், போலந்தின் ஜான் டுடாவை வென்றார்.9 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, பிரான்சின் வாசியர், அலிரேசா என மூவரும் தலா 5.5 புள்ளி பெற்றனர். வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடந்தது. குகேஷ் (4.0) 9வது இடம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை