உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் திவ்யான்ஷி: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் திவ்யான்ஷி: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

லிமா: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை திவ்யான்ஷி தங்கம் வென்றார்.பெருவில், உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷி, 564 புள்ளிளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இவரது 2வது தங்கம். ஏற்கனவே 25 மீ., 'பிஸ்டல்' பிரிவில் திவ்யான்ஷி இடம் பெற்ற இந்தியா, தங்கம் வென்றிருந்தது.மற்ற இந்திய வீராங்கனைகளான பரிஷா குப்தா (559 புள்ளி), மான்வி ஜெயின் (557) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.ஆண்களுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சூரஜ் சர்மா, 571 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் முகேஷ் நெலவல்லி (568) வெண்கலம் கைப்பற்றினார்.பதக்கப்பட்டியலில் இந்தியா (13 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம்) முதலிடத்தில் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ