உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: அரையிறுதியில் தமிழகம்

ஹாக்கி: அரையிறுதியில் தமிழகம்

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் தொடரின் அரையிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது.ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய உ.பி., அணிக்கு சுதீப் சிர்மகோ (8வது நிமிடம்), லலித் குமார் (15வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முதல் பாதி முடிவில் உ.பி., அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தமிழக அணிக்கு ஜிப் ஜான்சென் (32வது நிமிடம்), தாமஸ் சோர்ஸ்பி (53வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது.போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டன. இதன் முடிவில் 2-2 என மீண்டும் சமநிலை வகிக்க, 'சடன்டெத்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் உ.பி., அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உ.பி., அணிக்கு 2, தமிழக அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டன.லீக் சுற்றின் முடிவிப் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்கால் (19 புள்ளி), சூர்மா (19), ஐதராபாத் (18), தமிழகம் (18) அணிகள் அரையிறுதிக்கு (ஜன. 31) முன்னேறின. இதில் பெங்கால்-தமிழகம், சூர்மா-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ