உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜூனியர் ஹாக்கி: இந்திய பெண்கள் வெற்றி

ஜூனியர் ஹாக்கி: இந்திய பெண்கள் வெற்றி

சாண்டியாகோ: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி 4-0 என அயர்லாந்தை வென்றது. சிலியின் சாண்டியாகோ நகரில், ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி நடக்கிறது. 24 அணிகள் 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி 'சி' பிரிவில் வலிமையான ஜெர்மனி, நமீபியா, அயர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் நமீபியாவை வென்ற இந்தியா, அடுத்து ஜெர்மனியிடம் தோற்றது. நேற்று தனது கடைசி போட்டியில் அயர்லாந்து அணியை சந்தித்தது. 12வது நிமிடம் சிவாச் கனிகா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில், இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பூர்ணிமா (43) கோலாக மாற்றினார். 57 வது நிமிடத்தில் இந்தியாவின் சாக்சி, ஒரு கோல் அடித்து உதவினார். போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்த போது, பூர்ணிமா 2வது கோல் அடித்தார்.முடிவில் இந்திய அணி 4-0 என வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 6 புள்ளியுடன் உள்ளது. மற்ற போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப, இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ