உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சவாலான ஆஸி., ஹாக்கி தொடர் * கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கணிப்பு

சவாலான ஆஸி., ஹாக்கி தொடர் * கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கணிப்பு

பெங்களூரு: ''ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்தமண்ணில் எதிர்கொள்வது சவாலானது,'' என இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஆக. 29ல் ராஜ்கிரில் துவங்குகிறது. இதில் கோப்பை வெல்லும் அணி நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு (லாஸ் ஏஞ்சல்ஸ் 2028) தகுதி பெறலாம். இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.போட்டிகள் பெர்த் மைதானத்தில் ஆக. 15, 16, 19, 21ல் நடக்க உள்ளன. இதற்கான இந்திய அணியில் ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றனர்.இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறியது:ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது என்பது எப்போதும் மிகவும் சவாலானது. இதற்கு ஏற்ப நாங்கள் தயாராகி உள்ளோம். அடுத்து ஆசிய கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், இத்தொடரை சிறந்த பயிற்சிக் களமாக பயன்படுத்திக் கொள்வோம்.வலிமையான அணிக்கு எதிராக, எங்களை சோதிக்க காத்திருக்கிறோம். தேவையான நேரத்தில் ஒரு அணியாக இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.எங்களது பலவீனமான இடங்களை கண்டறிந்து, முன்னேற்றிக் கொள்ள நல்ல வாய்ப்பாக, ஆஸ்திரேலிய தொடர் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி