உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய ஜோடி வெண்கலம்: ஆசிய டேபிள் டென்னிசில் வரலாறு

இந்திய ஜோடி வெண்கலம்: ஆசிய டேபிள் டென்னிசில் வரலாறு

அஸ்தானா: ஆசிய டேபிள் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் சுதிர்தா, அய்ஹிகா ஜோடி வெண்கலம் வென்று வரலாறு படைத்தது.கஜகஸ்தானில், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுதிர்தா, அய்ஹிகா முகர்ஜி ஜோடி, ஜப்பானின் மிவா ஹரிமோடோ, மியூ கிஹாரா ஜோடியை எதிர்கொண்டது. மொத்தம் 30 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய இந்திய ஜோடி 0-3 (4-11, 9-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது.ஒற்றையரில் இந்தியாவின் மணிகா பத்ரா, மானவ் தாக்கர், மனுஷ் ஷா, 'ரவுண்டு-16' சுற்றோடு வெளியேறினர்.இத்தொடரில் இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் கிடைத்தது. ஏற்கனவே ஆண்கள், பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி தலா ஒரு வெண்கலம் வென்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி