தமிழக தங்கம் செர்வின் * 20 கி.மீ., நடை போட்டியில்...
சண்டிகர்: இந்தியன் ஓபன் 'ரேஸ் வாக்' (நடை பந்தயம்) தமிழக வீரர் செர்வின் செபாஸ்டின் தங்கம் வென்றார்.இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்தியன் ஓபன் ரேஸ் வாக் போட்டியின் 12வது சீசன் சண்டிகரில் நடந்தது. ஆண்களுக்கான 20 கி.மீ., போட்டியில் தேசிய சாம்பியன், தமிழகத்தின் செர்வின் செபாஸ்டியன், ஒரு மணி நேரம், 21 நிமிடம், 46.47 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 2025ம் ஆண்டில் இவர் வென்ற இரண்டாவது தங்கம் இது.இந்திய ராணுவத்தின் அமித் (1 மணி, 21:51.46 நிமிடம்), அமன்ஜோத் சிங் (1 மணி, 22:12.72 நிமிடம்) அடுத்த இரு இடம் பிடித்தனர்.35 கி.மீ., போட்டியில் ராணுவ அணியின் ராம் பாபூ (2 மணி, 32:53.50 நிமிடம்) தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹரியானா வீரர் சந்தீப் குமாருக்கு (2 மணி, 35:05.75 நிமிடம்) வெள்ளி கிடைத்தது.