வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Legend
He is a legend...He warrants a worship beyond the
போட்செப்ஸ்ட்ரூம்: சர்வதேச ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்.தென் ஆப்ரிக்காவில், சர்வதேச தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அதிகபட்சமாக 84.52 மீ., எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.நடப்பு சீசனை வெற்றியுடன் துவக்கிய நீரஜ், இந்த ஆண்டு ஈட்டி எறிதலில் சிறந்த செயல்பாட்டை பதிவு செய்த இந்திய வீரரானார். சமீபத்தில் நடந்த தேசிய விளையாட்டில் இந்தியாவின் சச்சின் யாதவ், 84.39 மீ., எறிந்திருந்தார். சர்வதேச வீரர்களில் 4வது இடம் பிடித்தார் நீரஜ். முதலிடத்தில் அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் (87.76 மீ.,) உள்ளார்.அடுத்த மாதம் நடக்கவுள்ள தோகா டயமண்ட் லீக் (மே 16), என்.சி. கிளாசிக் (மே 24, பஞ்சகுலா, ஹரியானா) போட்டியில் நீரஜ் பங்கேற்க உள்ளார்.
Legend
He is a legend...He warrants a worship beyond the