உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’

பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’

ரீடிங்: ‘குரூசிபிள்’ கோப்பை ஸ்னுாக்கர் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தின் ரீடிங் நகரில், ‘குரூசிபிள்’ கோப்பை ஸ்னுார்கர் (900 ‘பார்மட்’) தொடர் நடந்தது. இதில் பங்கேற்ற ‘நடப்பு உலக பில்லியர்ஸ் சாம்பியன்’ இந்தியாவின் பங்கஜ் அத்வானி, காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நீல் ராபர்ட்சன் (5–2), அரையிறுதியில் இங்கிலாந்தி ஜோ பெர்ரி (5–1) ஆகியோரை வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் பங்கஜ் அத்வானி, மால்டாவின் டோனி டிராகோ மோதினர். அபாரமாக ஆடிய பங்கஜ் அத்வானி 6–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பங்கஜ் அத்வானி. ‘குரூசிபிள்’ கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !