உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பிரியங்கா 7வது இடம்: சீன நடை போட்டியில்

பிரியங்கா 7வது இடம்: சீன நடை போட்டியில்

தைகாங்: சீன கிராண்ட் பிரிக்ஸ் நடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா 7வது இடம் பிடித்தார்.சீனாவில் கிராண்ட் பிரிக்ஸ் நடை போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 20 கி.மீ., பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 27, பங்கேற்றார். பந்தைய துாரத்தை ஒரு மணி நேரம், 29 நிமிடம், 48 வினாடியில் கடந்த பிரியங்கா 7வது இடத்தை கைப்பற்றினார். ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இவர், அன்னிய மண்ணில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். தவிர இது, இவரது 3வது சிறந்த செயல்பாடாக அமைந்தது. இதற்கு முன் ராஞ்சியில் 2021 (ஒரு மணி நேரம், 28 நிமிடம், 45 வினாடி), 2023ல் (ஒரு மணி நேரம், 28 நிமிடம், 50 வினாடி) நடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.முதலிடத்தை சீனாவின் ஜென்ஜியா மா (ஒரு மணி நேரம், 26 நிமிடம், 07 வினாடி) தட்டிச் சென்றார். தவிர 'டாப்-6' பட்டியலில் 5 சீன வீராங்கனைகள் இடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்