மேலும் செய்திகள்
ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
07-Jun-2025
ஆன்ட்வெர்ப்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ஆண்கள், பெண்கள் அணிகளுக்காக புரோ லீக் தொடர் நடக்கிறது. இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள இந்திய ஆண்கள் அணி தனது 13வது போட்டியில் நேற்று, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்திய அணிக்கு 8, 35வது நிமிடத்தில் அபிஷேக் 2 கோல் அடிக்க, 2-0 என முன்னிலை பெற்றது. இதன் பின் எழுச்சி கண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எப்ராம்ஸ் (42), ரின்டலா (56), கிரெய்க் (60) தலா ஒரு கோல் அடித்து உதவினர். முடிவில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இத்தொடரில் இந்தியா தொடர்ச்சியாக சந்தித்த 5வது தோல்வி ஆனது. தற்போது இந்தியா (15) 6வது இடத்தில் (13 போட்டியில் 5 வெற்றி, 8 தோல்வி) உள்ளது.பெண்கள் சறுக்கல்லண்டனில் பெண்களுக்கான புரோ ஹாக்கி லீக் தொடர் நடக்கிறது. நேற்று இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ஆஸ்திரேலியாவுக்கு சோனெல் (16), பிக்கெரிங் (22), ஸ்டீவர்ட் (36) கோல் அடித்தனர். இந்தியா தரப்பில் தீபிகா (44), நேஹா (52) மட்டும் கோல் அடிக்க, 2-3 என தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் இந்தியா (9ல் 3 வெற்றி, 6 தோல்வி) 7வது இடத்தில் உள்ளது.
07-Jun-2025