உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / முதலிடம் பிடித்தார் சீமா: தேசிய தடகள வட்டு எறிதலில்

முதலிடம் பிடித்தார் சீமா: தேசிய தடகள வட்டு எறிதலில்

ராஞ்சி: தேசிய தடகள வட்டு எறிதலில் ஹரியானா வீராங்கனை சீமா தங்கம் வென்றார்.ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில், ஹரியானாவின் சீமா, அதிகபட்சமாக 55.26 மீ., எறிந்து தங்கத்தை தட்டிச் சென்றார்.ரயில்வேயின் நிதி (53.71 மீ.,), ஹரியானாவின் சன்யா யாதவ் (52.05 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.தேவ் மீனா வெண்கலம்: ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் ரயில்வே அணியின் கவுதம், சர்வீசஸ் அணியின் ராம்பீர், மத்திய பிரதேசத்தின் தேவ் மீனா தலா 5.10 மீ., தாண்டி, முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில் ரயில்வே அணியின் பைரபி ராய் (13.10 மீ.,) தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் பூர்வா சவந்த் (13.05 மீ.,), மத்திய பிரதேசத்தின் நிமிஷா (12.96 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் ஹிமாச்சல பிரதேசத்தின் சீமா, இலக்கை 16 நிமிடம், 01.27 வினாடியில் கடந்து தங்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் அனைத்து இந்திய போலீஸ் அணியின் பிரின்ஸ் குமார், 14 நிமிடம், 06.57 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் தன்வார் (14:14.88), ரயில்வேயின் அபிஷேக் (14:19.16) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !