உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்பெஷல் ஒலிம்பிக்: இந்திய நட்சத்திரங்களுக்கு பாராட்டு

ஸ்பெஷல் ஒலிம்பிக்: இந்திய நட்சத்திரங்களுக்கு பாராட்டு

புதுடில்லி: ஸ்பெஷல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.துருக்கியில், அறிவுசார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடந்தது. இதில் அசத்திய இந்திய நட்சத்திரங்கள் 8 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கம் வென்றனர். இவர்களுக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் டில்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மத்திய இளைஞர், விளையாட்டு துறை இணையமைச்சர் ரக் ஷா கட்சே பரிசு வழங்கி பாராட்டினார்.தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம், வெள்ளிக்கு தலா ரூ. 14, வெண்கலத்திற்கு தலா ரூ. 8 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. பரிசு தொகையை உயர்த்தி வழங்கிய மத்திய அமைச்சகத்துக்கு, இந்திய ஸ்பெஷல் ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் மல்லிகா நட்டா, நன்றி தெரிவித்தார்.இந்தியா சார்பில் பாரதி 2, தீபக் தாகூர், கிரிதர், நிர்மலா, சமீர் யாதவ், அனில் குமார், வாசு திவாரி தலா ஒரு தங்கம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை