சிறந்த ஜூனியர் வீராங்கனை அனாஹத் * ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு விருது
புதுடில்லி: ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்படுகிறது. ஜூனியர் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் அனாஹத் சிங் தேர்வானார். உலகத் தரவரிசையில் 20 வது இடத்திலுள்ள அனாஹத், கடந்த ஆண்டு (2025) ஆசிய ஜூனியர், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். எகிப்தின் கெய்ரோவில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். சென்னையில் நடந்த உலக கோப்பை கலப்பு அணிகள் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அபே சிங் அபாரம்கடந்த ஆண்டின் சிறந்த வீரராக இந்தியாவின் அபே சிங் தேர்வு செய்யப்பட்டார். உலகத் தரவரிசையில் 25வது இடத்திலுள்ள இவர், ஆசிய சாம்பியன்ஷிப் உட்பட பல தொடரில் சாதித்துள்ளார். உலக கோப்பை (கலப்பு அணிகள்) தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். 2025ல் உலக ஜூனியர் அணிகளுக்கான சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்தியா, சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 2022ல் சவுரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா என இருவரும் விருது பெற்றிருந்தனர்.