உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சுருச்சி சிங் தங்கம்

சுருச்சி சிங் தங்கம்

முனிக்: ஜெர்மனியில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், 242.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) தங்கத்தை தட்டிச்சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் (241.2 புள்ளி) வெள்ளி வென்றார். இத்தொடரில் இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி என, 3 பதக்கம் கைப்பற்றிய இந்தியா முதலிடத்தில் உள்ளது.இந்தியா கோல் மழைகாகமிகஹாரா: ஜப்பானில், ஆசிய கோப்பை ஹாக்கி (18 வயது) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 13-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் கேதன் இஷ்வாஹா 3, ஷாரூக் அலி, அன்ஷ் பஹுத்ரா, பிரகலாத் ராஜ்பார், ஆஷிஸ் தானி பூர்த்தி தலா 2, ஆகாஷ் தீப், காஜீ கான் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் நாளை ஜப்பானை சந்திக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை