உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நீச்சல்: ஸ்ரீஹரி நடராஜ் தங்கம்

நீச்சல்: ஸ்ரீஹரி நடராஜ் தங்கம்

சிங்கப்பூர் சிட்டி: சிங்கப்பூர் தேசிய நீச்சல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் (200 மீ., 'பிரீஸ்டைல்') தங்கம் வென்றார்.சிங்கப்பூரில், தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 24, பங்கேற்றார். டோக்கியோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடிய இவர், பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.66 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இலக்கை அதிவேகமாக கடந்த இந்திய வீரரானார். இதற்கு முன், 2021ல் இந்தியாவின் சஜன் பிரகாஷ், பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 49.73 வினாடியில் கடந்திருந்தார்.இத்தொடரில் நடராஜ், தனது 2வது பதக்கத்தை வென்றார். ஏற்கனவே 100 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ