மேலும் செய்திகள்
பைனலில் இந்திய ஜோடி * சர்வதேச டேபிள் டென்னிசில்
28-Mar-2026
செனெக்: செக் குடியரசின் செனெக் நகரில் டபிள்யு.டி.டி., பீடர் டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் பால், சுதிர்த்தா முகர்ஜீ ஜோடி, பைனலுக்கு முன்னேறியது. இதில் பிரேசிலின் பெலிப்பே, லாரா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 8-11 என இழந்தது. அடுத்த செட்டை 11-8 என கைப்பற்றியது. தொடர்ந்து அசத்திய இந்திய ஜோடி மூன்றாவது செட்டை 11-9 என வசப்படுத்தியது. அடுத்து நடந்த நான்காவது செட்டையும் 11-7 என தன்வசப்படுத்தியது.முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. மற்றொரு இந்திய ஜோடி பயாஸ் ஜெயின், தனீஷா ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்தது. ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் பயாஸ் ஜெயின், ஆகாஷ் பால் ஜோடி ஏமாற்றியது.
28-Mar-2026