உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: பைனலில் ஜெய்ப்பூர்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: பைனலில் ஜெய்ப்பூர்

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் பைனலுக்கு ஜெய்ப்பூர் அணி முன்னேறியது. அரையிறுதியில் 8-7 என டில்லியை வீழ்த்தியது.ஆமதாபாத்தில் (குஜராத்) அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த டில்லி, கோவா, மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.முதல் அரையிறுதியில் டில்லி, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெய்ப்பூரின் கனக் ஜா 2-1 என டில்லியின் கியூக் இசாக்கை வென்றார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் மரியா ஜியாவோ (டில்லி) 2-1 என பிரிட் ஏர்லேண்ட்டை (ஜெய்ப்பூர்) வீழ்த்தினார்.கலப்பு இரட்டையர் போட்டியில் டில்லியின் மரியா ஜியாவோ, சத்யன் ஜோடி 2-1 என ஜெய்ப்பூரின் பிரிட் ஏர்லேண்ட், ஜீத் சந்திரா ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சத்யன் (டில்லி) 1-2 என யாஷன்ஸ் மாலிக்கிடம் (ஜெய்ப்பூர்) தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 2-1 என டில்லியின் தியாவை வென்றார்.முடிவில் ஜெய்ப்பூர் அணி 8-7 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !