மேலும் செய்திகள்
ஆசிய பாட்மின்டன்: இந்தோனேஷியா சாம்பியன்
16-Feb-2025
புதுடில்லி: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் வரும் மே 29ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது.இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், கடந்த 2017 முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதுவரை 5 சீசன் முடிந்துள்ளன. இதில் கோவா 2 (2023, 2024), சென்னை (2019), டில்லி (2018), பால்கன்ஸ் (2017) தலா ஒரு முறை கோப்பை வென்றன.இதன் 6வது சீசன் வரும் மே 29ல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் துவங்குகிறது. பைனல், ஜூன் 15ல் நடக்க உள்ளது. மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடும். ஒரு அணி, தனது பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும், மற்றொரு பிரிவில் ஏதாவது 2 அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும் விளையாடும். ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றில் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும், 2 வெளிநாட்டு நட்சத்திரங்கள் உட்பட 6 பேர் இடம் பெற்றிருப்பர். இரண்டு பெண்கள் ஒற்றையர், இரண்டு ஆண்கள் ஒற்றையர், ஒரு கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 போட்டி நடத்தப்படும்.
16-Feb-2025