உலக வில்வித்தை: பைனலில் இந்தியா
குவாங்ஜு: உலக வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவு பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு தகுதிச் சுற்றில் ரிஷாப் யாதவ் (709 புள்ளி), அமன் சைனி (707), பிரதமேஷ் (706) அடங்கிய இந்திய அணி 2122 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து, நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் அமெரிக்காவை வென்றது.அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, துருக்கி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 234-232 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் பைனலில் இந்திய அணி, பிரான்சை எதிர்கொள்கிறது.கலப்பு அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவில் ரிஷாப் யாதவ் (709), ஜோதி சுரேகா (707) ஜோடி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் (1416 புள்ளி) 4வது இடம் பிடித்த இந்திய அணி, நேரடியாக 2வது சுற்றுக்குள் நுழைந்தது. இதில் ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் எல் சால்வடாரை தோற்கடித்தது.அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. இதில் இந்திய அணி 157-155 என வெற்றி பெற்றது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.