உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

பிரான்ஸ் கலக்கல்ஜூரிச்: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 4-1 என வேல்சை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 4-0 என நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது.அரையிறுதியில் போலந்துடிரானா: அல்பானியாவில் நடக்கும் பெண்கள் (16 வயது) ஐரோப்பிய வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் போலந்து அணி 3--0 என லிதுவேனியாவை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 6 போட்டியில், 5ல் வென்ற போலந்து அரையிறுதிக்கு முன்னேறியது.தென் ஆப்ரிக்கா 'ஹாட்ரிக்'வெரோனா: இத்தாலியில் நடக்கும் உலக ரக்பி சாம்பியன்ஷிப் (20 வயது) லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 73-14 என ஸ்காட்லாந்தை வென்றது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.பின்லாந்து முன்னேற்றம்லா பால்மா: ஸ்பெயினில் நடக்கும் பெண்களுக்கான 'யூரோ' கோப்பை கூடைப்பந்து (18 வயது) காலிறுதியில் பின்லாந்து, மான்டினேக்ரோ அணிகள் மோதின. இதில் பின்லாந்து அணி 64-52 (16-18, 17-11, 16-15, 15-8) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.எக்ஸ்டிராஸ்* பெங்களூருவில், இந்திய ஓபன் பாரா தடகள சாம்பியன்ஷிப் 7வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்), சிம்ரன் (100, 200 மீ., ஓட்டம்) உள்ளிட்ட 262 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.* ஆஸ்திரேலிய தொடர் (ஆக. 8-22), ஆசிய கோப்பைக்கு (ஆக. 29-செப். 7) தயாராக இந்திய ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் (ஜூலை 14 - ஆக. 7) நடக்க உள்ளது. இதற்கான 33 பேர் கொண்ட உத்தேச பட்டியலில் ஹர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், செல்வம் கார்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.* சர்வதேச அரங்கில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்.எல்.சி.,) 4வது சீசன் வரும் நவ. 19 முதல் டிச. 13 வரை இந்தியாவின் 7 நகரங்களில் நடக்கவுள்ளது.* டில்லியில், உலக கோப்பை (2027), ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் (2028) தொடரை நடத்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு அனுமதி வழங்கியது.* ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுக்கு (ஆக. 6-10, பனாமா) தயாராக, இந்திய பெண்கள் அணி (20 வயது), உஸ்பெகிஸ்தானுடன் 2 சர்வதேச நட்பு போட்டியில் (ஜூலை 13, 16, டஷ்கென்ட்) விளையாடும் என, அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்தது.* பல்லேகெலேயில் நடந்த முதல் 'டி-20' போட்டியில் இலங்கை அணி (159/3, 19 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை (154/5) வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை