உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ஜெர்மனி அதிர்ச்சிபிராடிஸ்லாவா: சுலோவாகியாவில் நடந்த உலக கோப்பை (2026) கால்பந்து ஐரோப்பிய தகுதிச் சுற்று போட்டியில் ஜெர்மனி அணி 2-0 என, சுலோவாகியாவிடம் வீழ்ந்தது. அன்னிய மண்ணில் நடந்த உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் ஜெர்மனி அணி முதன்முறையாக தோல்வியடைந்தது. இதற்கு முன், 3 முறை சொந்த மண்ணில் தோல்வியடைந்திருந்தது.டைசன்-மேவெதர் மோதல்நியூயார்க்: அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கவுள்ள கண்காட்சி குத்துச்சண்டை போட்டியில், முன்னாள் அமெரிக்க 'ஹெவிவெயிட் சாம்பியன்' மைக் டைசன் 59, இதுவரை விளையாடிய 50 போட்டியிலும் வெற்றி பெற்ற அமெரிக்காவின் பிலாய்டு மேவெதர் ஜூனியர் 48, மோதவுள்ளனர். இதற்கான தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும்.அரையிறுதியில் சீனாஉலான்பாடர்: மங்கோலியாவில் நடக்கும் ஆசிய கோப்பை (16 வயது) கூடைப்பந்து காலிறுதியில் சீன அணி 84-69 என்ற கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தியது. மற்ற காலிறுதியில் நியூசிலாந்து 92-69 என ஈரானை வென்றது. ஆஸ்திரேலிய அணி 98-70 என, தென் கொரியாவை தோற்கடித்தது.காலிறுதியில் குரோஷியாஜிரா: மால்டாவில் நடக்கும் பெண்களுக்கான (18 வயது) ஐரோப்பிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் 'பிளே-ஆப்' போட்டியில் குரோஷிய அணி 19-5 என்ற கணக்கில் சுலோவாகியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் செர்பிய அணி 16-13 என துருக்கியை வென்றது.எக்ஸ்டிராஸ்* தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ், அமன் சைனி, பர்னீத் கவுர், பிரித்திகா, இளம் வீராங்கனை கதா கடாகே 15, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.* ஆமதாபாத்தில் வரும் செப். 28 - அக். 11ல் நடக்கவுள்ள ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் 11வது சீசனுக்கான சின்னம், லோகோவை, மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.* இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய பெண்கள் அணியில், காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்துவீச்சாளர் சோபி மோலினக்ஸ் இடம் பெற்றுள்ளார்.* முன்னாள் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 41, ஓய்வு முடிவை திரும்ப பெற்று, அடுத்த மாதம் ஓமனில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தகுதிச் சுற்றில் சமோவா அணிக்காக விளையாட உள்ளார். இவரது தாயார், சமோவா நாட்டில் பிறந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை