உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ராம்குமார்-மைனேனி அபாரம்: சென்னை ஓபன் டென்னிசில்

ராம்குமார்-மைனேனி அபாரம்: சென்னை ஓபன் டென்னிசில்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார், மைனேனி ஜோடி முன்னேறியது.சென்னையில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, ரஷ்யாவின் அகாபோனோவ், எவ்ஜெனி டியுர்னெவ் ஜோடியை எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி, ஜிம்பாப்வேயின் கோர்ட்னி ஜான் லாக், ஜப்பானின் ரியோ நோகுச்சி ஜோடியை சந்தித்தது. இதில் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி 6-2, 6-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சித்தாந்த் பந்தியா, பரிக்சித் சோமனி ஜோடி 6-7, 6-7 என சீனதைபேயின் ரே ஹோ, ஆஸ்திரேலியாவின் மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை