உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / சஹாஜா ஜோடி கலக்கல்

சஹாஜா ஜோடி கலக்கல்

சான்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா குவாட்டா ஜோடி, பிரிட்டனின் எஸ்தர் அடிஷினா, வெனிசுலாவின் சோபியா எலினா ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை சஹாஜா ஜோடி 6-3 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என எளிதாக வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ