உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / அரையிறுதியில் சபலென்கா

அரையிறுதியில் சபலென்கா

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு சபலென்கா முன்னேறினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, பெலராசின் சபலென்கா, 'நம்பர்-7' ஆக உள்ள, சீனாவின் குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை சபலென்கா 6-1 என கைப்பற்றினார். தொடர்ந்து மிரட்டிய இவர், அடுத்த செட்டையும் 6-2 வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.டிமிட்ரோவ் தோல்விஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-9' வீரர், பல்கேரியாவின் டிமிட்ரோவ், 20 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் டியபோவை சந்தித்தார். இதில் டிமிட்ரோவ், 3-6, 7-6, 3-6, 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அப்போது காயம் காரணமாக டிமிட்ரோவ் விலகிக் கொள்ள, டியபோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அரையிறுதிக்கு முன்னேறினார். போபண்ணா ஏமாற்றம்கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா, இந்தோனேஷியாவின் அல்டிலா ஜோடி, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென், அமெரிக்காவின் டெய்லர், டொனால்டு யங் ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை