உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / சுமித் நாகல் ஏமாற்றம்

சுமித் நாகல் ஏமாற்றம்

லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில், வரும் ஜூன் 30 முதல் ஜூலை 13 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 294 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 353 வது இடத்திலுள்ள இத்தாலியின் கியுலியோ ஜெப்பியரியை சந்தித்தார். முதல் செட்டை 2-6 என இழந்த சுமித் நாகல், அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றி பதிலடி தந்தார். மூன்றாவது, கடைசி செட்டில் ஏமாற்றிய இவர், 2-6 என நழுவவிட்டார். முடிவில் சுமித் நாகல், 2-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !