அன்புமணி ஆதரவாளர்கள் 47 பேர் அரியலுாரில் கைது
அரியலுார்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என, இரு அணிகளாக பா.ம.க., செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், அரியலுார் மாவட்ட செயலராக காடுவெட்டி ரவி, ராமதாசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அரியலுார் மாவட்ட செயலராக தமிழ்மறவன், அன்புமணியால் நியமிக்கப்பட்டார்.நேற்று, ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில், காடுவெட்டி ரவி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அன்புமணி ஆதரவாளர் தமிழ்மறவன் தலைமையிலான பா.ம.க.,வினர் 47 பேர், கூட்டத்தில் பங்கேற்க மண்டபத்துக்கு வந்தனர்.அப்போது, இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து, தமிழ்மறவன் உட்பட 47 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.